கடலூர்

சிதம்பரத்தில் பெண்ணிடம் நூதன முறையில் ரூ. ஒரு லட்சம் திருட்டு

DIN

சிதம்பரம்: சிதம்பரத்தில் வங்கியில் பணம் எடுத்து வந்த பெண்ணிடம், நூதன முறையில் மர்மநபர் ஒருவர் ரூ. ஒரு லட்சம் தொகையை பறித்துச் சென்றார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பொன்னம்பல நகரைச் சேர்ந்த சண்முகம். இவரது மனைவி கலாராணி (51). இவர்கள் இருவரும் இரு சக்கர வாகனத்தில்  புதன்கிழமை காலை 10.30 மணிக்கு சென்று வடக்குவீதியில் உள்ள கனரா வங்கியில் நகைகளை அடகு வைத்து ரூ.1.10 ஆயிரம் பெற்று மேலவீதியில் உள்ள மளிகை கடைக்கு சென்றுள்ளனர். 

பணத்தை செலவுக்கு ரூ.10 ஆயிரத்தை கையில் வைத்துக் கொண்டு மீதி ரூ.ஒரு லட்சத்தை இருசக்கர வாகனத்தின் பெட்டியில் வைத்த போது மர்மநபர்கள் இருவர் சில ரூபாய் நோட்டுகளை கீழே  போட்டு அவர்களது கவனத்தை திசை திருப்பிவிட்டு, கண்ணிமைக்கும் நேரத்தில் ரூ.ஒரு லட்சம் பணத்தை பறித்து சென்றனர்.

இது குறித்து சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் கலாராணி புகார் அளித்தார். புகாரின் பேரில் நகர காவல் உதவி ஆய்வாளர் நாகராஜ் சம்பவ இடத்திற்கு விசாரணை மேற்கொண்டு மர்மநபர்களை தேடி வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

SCROLL FOR NEXT