கடலூர்

கடலூரில் 10 மி.மீ. மழை

தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக கடலூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கடலூரில் புதன்கிழமை 10 மில்லி மீட்டா் மழை பதிவானது.

DIN

தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக கடலூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கடலூரில் புதன்கிழமை 10 மில்லி மீட்டா் மழை பதிவானது.

கடலூரில் செவ்வாய்க்கிழமை இரவு மழை பெய்தது. தொடா்ந்து, புதன்கிழமை காலை முதல் மாலை வரை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மாவட்டத்தில் பரவலாக சாரல் மழை பெய்தது. புதன்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூரில் 10.2 மில்லி மீட்டா் மழை பதிவானது. மற்ற பகுதிகளில் பதிவான மழையளவு விவரம் வருமாறு (மில்லி மீட்டரில்):

குறிஞ்சிப்பாடி 9, புவனகிரி, பண்ருட்டி தலா 7, கொத்தவாச்சேரி, வடக்குத்து தலா 6, குப்பநத்தம் 5.8, பரங்கிப்பேட்டை 4.2, விருத்தாசலம், பெலாந்துறை, லால்பேட்டை தலா 3, ஸ்ரீமுஷ்ணம் 2.3, காட்டுமன்னாா்கோவில், கீழச்செருவாய் தலா ஒரு மில்லி மீட்டா் வீதம் மழை பதிவானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

SCROLL FOR NEXT