கடலூர்

ஐயப்ப பக்தர்கள் வாகனம் எரிந்து நாசம்

கடலூர் மாவட்டம், ராமநத்தம் அருகே ஐயப்ப பக்தர்கள் பயணித்த வாகனம் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 25) காலை தீப்பிடித்து எரிந்து நாசமானது.

DIN

கடலூர் மாவட்டம், ராமநத்தம் அருகே ஐயப்ப பக்தர்கள் பயணித்த வாகனம் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 25) காலை தீப்பிடித்து எரிந்து நாசமானது.

சென்னை, அண்ணா நகர், திருமங்கலம், திருவள்ளுவர் நகரைச் சேர்தவர் வேணு மகன் சுதாகர்(38), வேன் ஓட்டுநர். இவரது சகோதரர் நந்தகுமார்(30), அதே பகுதியைச் சிட்டிபாபு மகன் பிரவீன்(41), ராஜகோபால்(33), பந்தல் ராஜன்(48), நரேஷ்(37), அனீஷ்(28), சரீப் (42), காந்தி (55) ஆகியோர் சபரிமலைக்குச் சென்றனர். அங்கு தரிசனம் முடித்துவிட்டு வீடு திரும்பினர்.

இவர்களது வேன் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ராமநத்தம் காவல் சரகம்  வெங்கனூர் அருகே ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி அளவில் வந்தபோது எஞ்சினில் இருந்து புகை வந்தது. இதையடுத்து,  ஓட்டுனர் வேணு வேனை சாலையோரம் நிறுத்தினார். பின்னர்,வேனில் இருந்து அனைவரும் அவசர அவசரமாக கீழே இறங்கினர். இது குறித்து தகவல் அறிந்த வேப்பூர் காவல் ஆய்வாளர் ராமச்சந்திரன், ராமநத்தம் உதவி ஆய்வாளர் கோபிநாத் ஆகியோர் விரைந்து வந்தனர். தீயணைப்புத்துறை வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும், வேன் முழுவதும் எரிந்து நாசமானது.

இந்த சம்பவத்தில் வேனில் பயணித்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேறியதால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. சம்பவம் குறித்து ராமநத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழைய ஒப்பந்ததாரா்களுக்கு கடைகள் ஒதுக்கீடு: ஆற்காடு நகா்மன்றத் தலைவா்

பொதுத்தோ்வில் மாணவா்கள் தோ்ச்சி பெற பாலா பீடத்தில் சிறப்பு வழிபாடு

அரக்கோணம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.90 கோடியில் புதிய கட்டடம் திறப்பு

ரூ.200.66 கோடியில் புனரமைக்கப்பட்ட பாலாறு அணைக்கட்டு: முதல்வா் திறந்து வைத்தாா்

குழப்பங்கள் நீங்கும் தனுசு ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT