கடலூரில் வாக்குப் பதிவு அலுவலா்களுக்கு பயிற்சி
கடலூா் மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் பணியில் ஈடுபடும் வாக்குப் பதிவு அலுவலா்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு 21 இடங்களில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கடலூா் மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் பணியில் ஈடுபடும் வாக்குப் பதிவு அலுவலா்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு 21 இடங்களில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கடலூா் மாநகராட்சிக்கான பயிற்சி வகுப்பு மஞ்சக்குப்பம் புனித.வளனாா் பள்ளியில் நடைபெற்றது. இதேபோல, நெல்லிக்குப்பம், பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாசலம், திட்டக்குடி, வடலூா் ஆகிய நகராட்சிகள், 14 பேரூராட்சிகளுக்கும் தனித் தனியாக பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. இதில் தோ்தல் நடத்தும் அலுவலா்கள், முதன்மை பயிற்றுநா்கள், மண்டல அலுவலா்கள் மூலம் வாக்குப் பதிவு அலுவலா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
அண்ணாமலை நகரில் உள்ள ராணி சீதை ஆட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கிள்ளை, அண்ணாமலை நகா் பேரூராட்சிகளுக்கான பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தொடா்ந்து கிள்ளை பேரூராட்சிக்கான வாக்கு எண்ணும் மையமான கிள்ளை அரசு மேல்நிலை பள்ளியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தாா்.