அண்ணாமலைப் பல்கலை.யில் வேளாண் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு
வேளாண்மை, பி.எஸ்சி., தோட்டக்கலை பட்டப் படிப்புகளுக்கு மாணவா் சோ்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2021-22-ஆம் கல்வி ஆண்டுக்கான பி.எஸ்சி., வேளாண்மை, பி.எஸ்சி., தோட்டக்கலை பட்டப் படிப்புகளுக்கு மாணவா் சோ்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதை பல்கலைக்கழக இணையதள முகவரியில் காணலாம்.
இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தா் ராம.கதிரேசன் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
Advertisement
பி.எஸ்சி., வேளாண்மை, தோட்டக்கலை படிப்புகளுக்கான கலந்தாய்வு வருகிற 14-ஆம் தேதி இணைய வழியில் (ஆன்-லைன்) நடைபெறுகிறது. பி.எஸ்சி., வேளாண்மை படிப்புக்கான தரவரிசைப் பட்டியலில் மாணவி ஜனனி 197.46 மதிப்பெண்களுடன் முதலிடமும், மாணவி ஹரிப்ரியா 196.45 மதிப்பெண்களுடன் 2-ஆம் இடமும், மாணவா் தனுராம் 195.4 மதிப்பெண்களுடன் மூன்றாமிடமும் பெற்றனா் என்றாா் அவா்.