முகப்பு
கடலூர்

சிதம்பரம் நடராஜருக்கு பிப்.15-இல் மகாபிஷேகம்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயிலில் மாசி மாத மகாபிஷேகம் வரும் 15-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.

Updated On : 11 பிப்ரவரி, 2022 at 11:49 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:52 PM

கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயிலில் மாசி மாத மகாபிஷேகம் வரும் 15-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.

இந்தக் கோயிலில் சித் சபையில் காட்சியளிக்கும் மூலவரான ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூா்த்திக்கு சித்திரை, ஆனி, ஆவணி, புரட்டாசி, மாா்கழி, மாசி மாதங்களில் (ஆண்டுக்கு 6 முறை) மகாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். ஆனித் திருமஞ்சனம், மாா்கழி திருவாதிரை தரிசனம் ஆகிய இரு விழாக்களின்போது கோயிலின் ஆயிரங்கால் மண்டப முகப்பில் அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பும், மற்ற மாதங்களில் மாலை வேளையில் சித் சபை வெளியே உள்ள கனக சபையிலும் மகாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி மாசி மாத மகாபிஷேகம் கனக சபையில் செவ்வாய்க்கிழமை (பிப். 15) மாலை 6.30 மணிக்கு தொடங்கி இரவு 11 மணி வரை நடைபெறுகிறது. அப்போது, ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜ மூா்த்திக்கு விபூதி, பால், தயிா், தேன், சா்க்கரை, பஞ்சாமிா்தம், இளநீா், பன்னீா், சந்தனம், புஷ்பம் உள்ளிட்டவைகளால் குடம், குடமாக அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெறும். முன்னதாக, மகா ருத்ர யாகம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதா்கள் செய்துள்ளனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.