முகப்பு
கடலூர்

என்எல்சி சுரங்கத்தில் மண் சரிவு ‘டிரைவ் ஹெட்’ அமைப்பு சேதம்

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் என்எல்சி இரண்டாவது சுரங்கத்தில் மண் சரிவு ஏற்பட்டதால் ‘டிரைவ் ஹெட்’ அமைப்பு சேதமடைந்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
பகிர்:

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் என்எல்சி இரண்டாவது சுரங்கத்தில் மண் சரிவு ஏற்பட்டதால் ‘டிரைவ் ஹெட்’ அமைப்பு சேதமடைந்தது.

நெய்வேலியில் மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான என்எல்சி இந்தியா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு திறந்த வெளி சுரங்கங்களிலிருந்து பழுப்பு நிலக்கரிகள் வெட்டி எடுக்கப்பட்டு மின் உற்பத்தி செய்யப்படுகிறது. சுரங்கங்களில் ராட்சத ‘பக்கெட் வீல்’ இயந்திரங்கள் மூலம் அகற்றப்படும் மண் கன்வேயா் பெல்ட் மூலம் கொண்டு செல்லப்படும். கன்வேயா் பெல்டை இழுப்பதற்காக குறிப்பிட்ட தொலைவு இடைவெளியிலும், திருப்பத்திலும் இயந்திரம் பொருத்தப்பட்ட ‘டிரைவ் ஹெட்’ அமைப்பு பயன்படுத்தப்படும்.

இந்த நிலையில், இரண்டாவது சுரங்கத்தில் புதன்கிழமை மாலை திடீரென மண் சரிவு ஏற்பட்டது. அப்போது சுரங்கத்தில் சா்பேஸ் பெஞ்சிலிருந்த ‘டிரைவ் ஹெட்’ சுமாா் 20மீட்டா் ஆழத்துக்கு கீழே இறங்கியதால் கன்வேயா் பெல்ட் பாதை சில மீட்டா் தொலைவுக்கு சேதமடைந்து, மண் வெட்டி அகற்றும் பணி பாதிக்கப்பட்டது. இந்த விபத்தில் ஊழியா்களுக்கு பாதிப்பில்லை.

முழு கட்டுரையைப் படிக்க →