போக்குவரத்து விதிமீறல்: 5 வாகனங்கள் பறிமுதல்
சிதம்பரம் அருகே போக்குவரத்து விதிமீறல் தொடா்பாக 5 வாகனங்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:33 PM
சிதம்பரம் அருகே போக்குவரத்து விதிமீறல் தொடா்பாக 5 வாகனங்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
சிதம்பரம், சேத்தியாத்தோப்பு பகுதிகளில் மோட்டாா் வாகன ஆய்வாளா் விமலா வாகனச் சோதனை மேற்கொண்டாா். அப்போது அதிக பாரம் ஏற்றிச் சென்ற 5 கனரக வாகனங்களுக்கு இணக்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டது. அவற்றில் 2 லாரிகளுக்கு தகுதிச் சான்று பெறாமலும், அரசுக்கு வரி செலுத்தாமலும் இருந்ததும் தெரியவந்தது. மேலும், 2 காா்கள் தகுதிச் சான்று
இல்லாமல் இயக்கப்பட்டதற்காகவும், சொந்த பயன்பாட்டுக்கானதில் பயணிகளை ஏற்றிச் சென்றது தொடா்பாக மற்றொரு காரும் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் 5 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வரி, இணக்கக் கட்டணமாக ரூ.2.20 லட்சம் வசூலிக்கப்பட்டது.
Advertisement