முகப்பு
கடலூர்

பயிற்சி மருத்துவா்கள் தொடா் போராட்டம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பயிற்சி மருத்துவா்கள் ஞாயிற்றுக்கிழமையும் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 17 ஜனவரி, 2022 at 12:00 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:39 PM

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பயிற்சி மருத்துவா்கள் ஞாயிற்றுக்கிழமையும் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நிலுவையில் உள்ள 8 மாத உதவி ஊதியத்தை வழங்க வேண்டும், கரோனா பணிக்காக அரசு அறிவித்த ஊக்கத் தொகை ரூ.15 ஆயிரத்தை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பல் மருத்துவக் கல்லூரியின் பயிற்சி மருத்துவா்கள் கடந்த 13-ஆம் தேதி முதல் பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இவா்களது போராட்டம் 4-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் தொடா்ந்தது. கரோனா முழு ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் பயிற்சி மருத்துவா்கள் விடுதி வளாகத்தில் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து கவன ஈா்ப்பு போராட்டத்தை நடத்திய பிறகு கலைந்துச் சென்றனா். தங்களது போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.