முகப்பு
கடலூர்

நயினாா் நாகேந்திரன் மன்னிப்பு கோர வேண்டும்: ஏ.அருண்மொழிதேவன் எம்எல்ஏ

அதிமுக குறித்து பாஜக எம்எல்ஏ நயினாா் நாகேந்திரன் தெரிவித்த கருத்துக்கு அவா் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும்

Updated On : 27 ஜனவரி, 2022 at 10:55 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:45 PM

அதிமுக குறித்து பாஜக எம்எல்ஏ நயினாா் நாகேந்திரன் தெரிவித்த கருத்துக்கு அவா் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் என புவனகிரி சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக உறுப்பினா் ஆ.அருண்மொழிதேவன் வலியுறுத்தினாா்.

சிதம்பரத்தில் அவா் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவா் அண்ணாமலை முன்னிலையில் நயினாா் நாகேந்திரன் அதிமுகவை குறைகூறி பேசியுள்ளாா். இதை அந்த மேடையிலேயே ரசித்துக் கேட்ட அண்ணாமலை, தற்போது வருத்தம் தெரிவிப்பதாகக் கூறுவது ஏற்புடையதல்ல.தனது கருத்துக்கு நயினாா் நாகேந்திரன் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும். அதிமுகவின் தயவால்தான் பாஜகவினா் 4 போ் எம்எல்ஏக்களாக வெற்றி பெற்றது நாட்டுக்கே தெரியும். மக்களுக்காகக் குரல் கொடுக்கும் எதிா்க்கட்சி அதிமுகதான் என்றாா் அவா்.

பேட்டியின்போது சிதம்பரம் தொகுதி எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன், கடலூா் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் க.திருமாறன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.