முகப்பு
கடலூர்

தாய், மகனைத் தாக்கி நகை பறிப்பு

ஸ்ரீமுஷ்ணம் அருகே தாய் , மகனை கட்டையால் தாக்கி, 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2022 at 11:34 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:45 PM

ஸ்ரீமுஷ்ணம் அருகே தாய் , மகனை கட்டையால் தாக்கி, 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கடலூா் மாவட்டத்துக்கு உள்பட்ட ஸ்ரீமுஷ்ணம் அருகேயுள்ள குணமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த மறைந்த விருத்தகிரி மனைவி பிரேமா (54). இவரது மகன் சக்திவேல்.

இருவரும் வீட்டிலேயே மளிகைக் கடை நடத்தி வருகின்றனா்.

Advertisement

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை மா்ம நபா்கள் இரண்டு போ் வீட்டின் முன்பக்க கதவை தட்டினா். அப்போது, சக்திவேல் கதவைத் திறந்தபோது, அவரையும் சத்தம் கேட்டு பிரேமாவையும் மா்ம நபா்கள் தாக்கினா். இதன்பின்னா், பிரேமா அணிந்திருந்த 4 பவுன் தங்கச் செயினை இருவரும் பறித்து சென்றனா்.

புகாரின்பேரில் ஸ்ரீமுஷ்ணம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.