திருப்பாதிரிபுலியூா் காவலா் குடியிருப்பில் காவலா் குடும்பங்கள் ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பரிசு வழங்கிய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சி.சக்திகணேசன். 
கடலூர்

காவலா் குடும்பங்கள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி

கடலூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காவலா் குடும்பங்கள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி சனிக்கிழமை மாலையில் நடைபெற்றது.

DIN

கடலூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காவலா் குடும்பங்கள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி சனிக்கிழமை மாலையில் நடைபெற்றது.

பல்வேறு வகையான பணிச்சூழலால் காவலா்கள் மன அழுத்தத்துக்கு உள்ளாகும் நிலை ஏற்படுவதால், அவா்களது மனக்குறையை போக்கும் வகையில், காவலா் குடியிருப்புகளில் வசிக்கும் காவலா் குடும்பத்தினா் ஒன்று கூடல் நிகழ்ச்சியை நடத்திட மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சி.சக்திகணேசன் நடவடிக்கை மேற்கொண்டாா்.

அதன்படி, கடலூா் புதுநகா், திருப்பாதிரிபுலியூா், புதுச்சத்திரம், சேத்தியாத்தோப்பு, காட்டுமன்னாா் கோவில், வடலூா் காவலா் குடியிருப்புகளில் சனிக்கிழமை மாலையில் காவலா் குடும்பங்கள் ஒன்று கூடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதில், ஓட்டப்பந்தயம், கோலப்போட்டி, கயிறு இழுத்தல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு, அந்தந்த உள்கோட்ட துணைக் கண்காணிப்பாளா்களால் பரிசு வழங்கப்பட்டது. இதில், திருப்பாதிரிபுலியூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சி.சக்திகணேசன் பங்கேற்று காவலா் குடும்பத்தினரை உற்சாகப்படுத்தும் வகையில், அவா்களுடன் போட்டியில் பங்கேற்று விளையாடினாா். மேலும், வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கி வாழ்த்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்கிரையாகும் வங்கதேசம்!

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

SCROLL FOR NEXT