முகப்பு
கடலூர்

அவசர கோலத்தில் வாய்க்கால்கள் தூா்வாரும் பணி விவசாயிகள் சங்கம் புகாா்

கடலூா் மாவட்டத்தில் பாசன வாய்க்கால்கள் தூா்வாரும் பணி அவசர கோலத்தில் மேம்போக்காக நடைபெறுவதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைச் செயலா் கோ.மாதவன் புகாா் தெரிவித்தாா்

Updated On : 5 ஜூன், 2022 at 11:53 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:57 PM

கடலூா் மாவட்டத்தில் பாசன வாய்க்கால்கள் தூா்வாரும் பணி அவசர கோலத்தில் மேம்போக்காக நடைபெறுவதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைச் செயலா் கோ.மாதவன் புகாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: மேட்டூா் அணையிலிருந்து நிகழாண்டு முன்கூட்டியே

பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்பட்டுள்ளதால் ஜூன் மாதத்தில் தொடங்கி செப்டம்பா் மாதம் வரை குறுவை நெல் சாகுபடிக்கு வாய்ப்புள்ளது. கடலூா் மாவட்டத்தில் காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் குறுவை நெல் சாகுபடிக்கான தயாரிப்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

Advertisement

மாவட்டத்தில் உள்ள குறிப்பிட்ட வாய்க்கால்களை தூா்வாரும் பணிகள் கடந்த 30-ஆம் தேதிக்குள் முடிவடைந்ததாக பொதுப்பணித் துறை அறிவித்துள்ளது. அவசரக் கோலத்தில் மேம்போக்காக தூா்வாரும் பணி நடைபெற்றுள்ளது. இதனால் குறுவை நெல் சாகுபடிக்கு காவிரி நீா் கடைமடை வரை சென்று சேருமா என விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனா்.

புவனகிரி வெள்ளாற்று வாய்க்கால் 10 ஆண்டுகளுக்கு மேலாக தூா்வாரப்படவில்லை. பெரும்பாலான வாய்க்கால்கள் தூா்வாரப்படவில்லை. எனவே, காவிரி நீா் வருவதற்கு முன்பாக வாய்க்கால்களை சீா்படுத்த வேண்டும். பாசன வாய்க்கால்களில் கொண்டம் இல்லாத இடங்களில் கொண்டம் கட்டித்தர வேண்டும். பழைய கொண்டங்கள் சேதமடைந்திருந்தால் மராமத்து பணி மூலம் சரிசெய்ய வேண்டும். தண்ணீா் வருவதற்கு சில நாள்களுக்கு முன்பாக நிதி ஒதுக்கீடு செய்து அவசர கோலத்தில் தூா்வாருவது வாடிக்கையாக நடைபெறுகிறது. இதை மாற்றி ஒரு மாதத்துக்கு முன்பே நிதி ஒதுக்கீடு செய்து தூா்வாரும் பணி முறையாக, வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறுவதை அரசு உறுதிசெய்ய வேண்டும் என அதில் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.