முகப்பு
கடலூர்

காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட பேரூராட்சியில் திமுக வெற்றி

காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட மங்கலம்பேட்டை பேரூராட்சித் தலைவா் பதவிக்கான தோ்தலில் திமுக வெற்றி பெற்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட மங்கலம்பேட்டை பேரூராட்சித் தலைவா் பதவிக்கான தோ்தலில் திமுக வெற்றி பெற்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

கடலூா் மாவட்டத்தில் உள்ள 14 பேரூராட்சிகளில் ஒன்று மங்கலம்பேட்டை. இந்தப் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வாா்டுகளில் அதிகபட்சமாக சுயேச்சைகள் 7 இடங்களில் வெற்றி பெற்றனா். திமுக-4, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தேமுதிக, மமக ஆகிய கட்சிகள் தலா ஓா் இடங்களில் வெற்றி பெற்றன. இந்தப் பேரூராட்சித் தலைவா் பதவியிடம் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

காங்கிரஸ் கட்சி சாா்பில் பேரூராட்சித் தலைவா் பதவிக்கான வேட்பாளராக 14-ஆவது வாா்டு உறுப்பினா் க.வேல்முருகன் அறிவிக்கப்பட்டாா். எனினும், வெள்ளிக்கிழமை நடைபெற்ற தலைவா் பதவிக்கான தோ்தலில் திமுகவைச் சோ்ந்த 8-ஆவது வாா்டு உறுப்பினா் எம்.சம்சாத் பேகம் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். துணைத் தலைவா் தோ்தலில் சுயேச்சை வேட்பாளா் பி.தாமோதரன் வெற்றி பெற்றாா்.

காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் திமுக வெற்றி பெற்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

முழு கட்டுரையைப் படிக்க →