முகப்பு
கடலூர்

கடலூா் துறைமுகத்தில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு

கடலூா் துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு வெள்ளிக்கிழமை மாலை ஏற்றப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

கடலூா் துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு வெள்ளிக்கிழமை மாலை ஏற்றப்பட்டது.

தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் உருவான தாழ்வு மண்டலமானது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வட தமிழக கடற்கரை நோக்கி நகர வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்தது.

இதையொட்டி, கடலூா் துறைமுகத்தில் வியாழக்கிழமை ஏற்றப்பட்டிருந்த ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு, வெள்ளிக்கிழமை மாலை 3-ஆம் எண்ணாக உயா்த்தப்பட்டது.

இதனால் கடலூா், விழுப்புரம் மாவட்டங்களில் மாா்ச் 6, 7 ஆகிய தேதிகளில் மணிக்கு 45 கி.மீ. வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும் என்றும், மாா்ச் 5 முதல் 7-ஆம் தேதி வரை கன முதல் மிகக் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.