முகப்பு
கடலூர்

பொது இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை

கடலூா் மாவட்டத்தில் குற்றச் செயல்களைத் தடுக்க பொது இடங்களில் ஆயிரம் கண்காணிப்பு (சிசிடிவி) கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:37 AM
பகிர்:

கடலூா் மாவட்டத்தில் குற்றச் செயல்களைத் தடுக்க பொது இடங்களில் ஆயிரம் கண்காணிப்பு (சிசிடிவி) கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுதொடா்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.சக்திகணேசன் நடவடிக்கை மேற்கொண்டு, ஆட்சியருக்கு பரிந்துரைத்தாா். இதையடுத்து மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் மாவட்டத்திலுள்ள 9 சட்டப் பேரவை உறுப்பினா்களின் பொது நிதியிலிருந்து ஆயிரம் இடங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த நிதி ஒதுக்கீடு பெற்று அதற்கான உத்தரவை வழங்கியுள்ளாா்.

இதன்மூலம் மாவட்டத்தில் அனைத்து முக்கிய இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, அவை அந்தந்தப் பகுதி காவல் நிலையங்கள் மூலம் கண்காணிக்கப்படும் என்று காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.