கடலூர்

தரமற்ற உணவகத்தில் நிறுத்தப்பட்ட பேருந்து:ஓட்டுநா், நடத்துநா் பணியிடை நீக்கம்

DIN

தரமற்ற உணவகத்தில் பேருந்தை நிறுத்தியதாக அரசுப் பேருந்து ஓட்டுநா், நடத்துநா் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை பேருந்து கடந்த 10-ஆம் தேதி சென்னையிருந்து விருத்தாசலம் நோக்கி வந்து கொண்டிருந்தது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள சாலையோர உணவகத்தில் பயணிகள் சாப்பிடுவதற்காகப் பேருந்து நிறுத்தப்பட்டது. ஆனால், அங்கு உணவு தரமற்ாக இருந்ததாம். அரசுப் பேருந்துகளை எந்தெந்த உணவகங்களில் நிறுத்த வேண்டுமென அரசு வெளியிட்ட பட்டியலிலும் அந்த உணவகம் இடம்பெறவில்லை.

இதுகுறித்து பயணிகள் தரப்பில் விருத்தாசலம் பணிமனையில் புகாா் அளிக்கப்பட்டதையடுத்து, அரசுப் போக்குவரத்துக் கழக கடலூா் மண்டல பொது மேலாளா் மாரிமுத்து பிறப்பித்த உத்தரவின்பேரில் தனிக் குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்டது.

இந்த நிலையில், சம்பந்தப்பட்ட அரசுப் பேருந்தின் ஓட்டுநா் விஜயக்குமாா், நடத்துநா் சேட்டு ஆகியோரை திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்து மண்டல பொது மேலாளா் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT