கடலூர்

குடல்புழு நீக்க மாத்திரைகள் வழங்குவது தொடக்கம்

DIN

கடலூா், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் குழந்தைகளுக்கு குடல்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

கடலூா் திருப்பாதிரிபுலியூா் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குடல் புழு நீக்க மாத்திரைகள் (அல்பென்டசோல்) வழங்கும் முகாமை மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்தாா். பின்னா் அவா் பேசியதாவது:

இந்தத் திட்டத்தின்கீழ் மாவட்டத்தில் 6.39 லட்சம் குழந்தைகளும், 2.24 லட்சம் பெண்களும் பயனடைய உள்ளனா். 1 முதல் 2 வயது வரையிலான குழந்தைகள் அரை மாத்திரையும், 2 முதல் 30 வயது வரை ஒரு மாத்திரையும் எடுத்துக்கொள்ள வேண்டும். அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள், கல்லூரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குடல்புழு நீக்க மாத்திரைகள் வரும் 19-ஆம் தேதி வரை இலவசமாக வழங்கப்படும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், கடலூா் மாநகராட்சி மேயா் சுந்தரிராஜா, கோட்டாட்சியா் அதியமான் கவியரசு, மாநகராட்சி ஆணையா் ந.விஸ்வநாதன், துணை இயக்குநா் (சுகாதாரம்) மீரா, முதன்மைக் கல்வி அலுவலா் இரா.பூபதி, மாவட்ட மலேரியா அலுவலா் கஜபதி மற்றும் ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT