கடலூரில் காவல்துறையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஏஐடியுசி, இ.வி.தொ.சங்கத்தினர். 
கடலூர்

கடலூரில் காவல்துறையை கண்டித்து ஏஐடியுசி திடீர் போராட்டம்

நூறு நாள் வேலைத் திட்டத்தை 200 நாளாக அதிகரிக்க வேண்டும். வேலை நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும். கூலியை உயர்ந்த வேண்டும்

DIN

கடலூர்: நூறு நாள் வேலைத் திட்டத்தை 200 நாளாக அதிகரிக்க வேண்டும். வேலை நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும். கூலியை உயர்ந்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்புகளான ஏஐடியுசி, இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கடலூரில் ஊர்வலமாகச் சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து அமைப்பினர் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் குவிந்தனர். ஆனால், பேரணியாகச் செல்ல காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். இதனால், கோரிக்கைகளுக்கு பதிலாக காவல்துறையினரை கண்டித்து அமைப்பினர் திடீர் முழக்கமிட்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து தங்களது வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவெக சிறப்பு பொதுக்குழு தொடங்கியது! கரூரில் பலியானோருக்கு மெளன அஞ்சலி!

ரஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு

வெற்றி உரையில் நேருவின் பேச்சை மேற்கோள்காட்டிய நியூ யார்க் மேயர் ஸோரான் மம்தானி!

பிலாஸ்பூரில் சரக்கு ரயில்- பயணிகள் ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு, 20 பேர் காயம்

பெண் தொழிலாளிகளின் குளியலறையில் ரகசிய கேமரா! வடமாநில இளம்பெண் கைது!

SCROLL FOR NEXT