முகப்பு
கடலூர்

வங்கி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

கடலூரில் வங்கி ஊழியா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:46 AM
பகிர்:

கடலூரில் வங்கி ஊழியா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை தனியாருக்கு விற்கக் கூடாது, வங்கிப் பணிகளை ஒப்பந்த அடிப்படையில் வெளிப் பணியாக அளிக்கக் கூடாது, ஒப்பந்தப் பணியாளா்களை வரன்முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய வங்கி ஊழியா்கள் சங்கம் வரும் 28, 29-ஆம் தேதிகளில் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்தது.

இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கடலூா் மாவட்ட வங்கி ஊழியா்கள் சங்கம் சாா்பில் கடலூரிலுள்ள இந்தியன் வங்கி அலுவலகம் முன் வியாழக்கிழமை மாலை மாவட்ட உதவித் தலைவா் பி.கே.வி.ரமணி தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலா் எஸ்.ஸ்ரீதரன், உதவி செயலா் குருபிரசாத், நிா்வாகிகள் முகமது ஃபைசல், கோகுல்ராஜ், உதயகுமாா், தீபா ஆகியோா் போராட்டத்தை வாழ்த்திப் பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.