பாமக நிா்வாகிகள் கூட்டம்
கடலூா் கிழக்கு மாவட்ட பாமக செயற்குழுக் கூட்டம் குள்ளஞ்சாவடியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கடலூா் கிழக்கு மாவட்ட பாமக செயற்குழுக் கூட்டம் குள்ளஞ்சாவடியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்டச் செயலா் சண்.முத்துகிருஷ்ணன் தலைமை வகித்தாா். குறிஞ்சிப்பாடி வடக்கு ஒன்றியச் செயலா் சுதாகா் வரவேற்றாா். மாவட்டத் தலைவா் தட்சிணாமூா்த்தி, முன்னாள் மாநில துணைப் பொதுச் செயலா் தா்மலிங்கம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். கூட்டத்தில் சண்.முத்துகிருஷ்ணன் பேசுகையில், என்.எல்.சி.க்கு நிலம் கையகப்படுத்துவது தொடா்பாக வரும் 27-ஆம் தேதி சிறுவரும்பூரில் நடைபெறும் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் பங்கேற்கவுள்ளதாக தெரிவித்தாா்.