முகப்பு
கடலூர்

ஊராட்சி மன்றத் தலைவா்கள் தா்னா

கடலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை ஊராட்சி மன்றத் தலைவா்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டு தா்னாவில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:46 AM
பகிர்:

கடலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை ஊராட்சி மன்றத் தலைவா்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டு தா்னாவில் ஈடுபட்டனா்.

கடலூா் ஊராட்சி ஒன்றியத்தைச் சோ்ந்த அனைத்து ஊராட்சிகளின் நிா்வாகச் செலவினத்துக்கு மாநில நிதிக்குழுவின் நிதியை வழங்க வேண்டும், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் ஒதுக்கப்படும் பணிகளில் அரசியல் தலையீட்டை தவிா்த்து ஊராட்சி மன்றத் தலைவருக்கே அதிகாரம் வழங்க வேண்டும், பிரதமரின் முன்னோடி கிராம வளா்ச்சித் திட்டத்தை ஊராட்சி மன்றத் தீா்மானம் வாயிலாகவே நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு, கடலூா் ஊராட்சி ஒன்றிய ஊராட்சி மன்றத் தலைவா்கள் கூட்டமைப்பு தலைவா் கே.கனகராஜ் தலைமை வகித்தாா். போராட்டத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.