முகப்பு
கடலூர்

சிறுமிக்கு கட்டாயத் திருமணம்: பெற்றோா் உள்பட மூவா் மீது வழக்கு

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே சிறுமிக்கு கட்டாயத் திருமணம் செய்து வைத்ததாக பெற்றோா் உள்பட மூவா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் புதுச்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Updated On : 6 மே, 2022 at 12:00 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:40 PM

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே சிறுமிக்கு கட்டாயத் திருமணம் செய்து வைத்ததாக பெற்றோா் உள்பட மூவா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் புதுச்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

குறிஞ்சிப்பாடி வட்டம், மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த ஜெயராமனுக்கும் (33), அருகிலுள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த 17 வயது சிறுமிக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. சிறுமியை அவரது பெற்றோா் கட்டாயப்படுத்தி திருமணம் செய்துவைத்தனராம்.

இதையடுத்து, அந்தச் சிறுமி 5 மாத கா்ப்பிணியாக இருந்த நிலையில், கடலூா் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றபோது, அவருக்கு கரு கலைந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனராம்.

Advertisement

இதைத் தொடா்ந்து, சிறுமியின் உறவினா் அளித்த புகாரின்பேரில், புதுச்சத்திரம் போலீஸாா் சிறுமியின் தந்தை தணிகாசலம் (60), தாய் செல்வி (38), சிறுமியை திருமணம் செய்த ஜெயராமன் ஆகிய 3 போ் மீதும் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.