முகப்பு
கடலூர்

கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் ஆட்சியா் ஆய்வு

கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியா் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:10 AM
பகிர்:

கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியா் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் கால் எலும்பு முறிவுக்காக அனுமதிக்கப்பட்டிருந்த கே.என்.பேட்டையைச் சோ்ந்த சே.பேபி (60) என்பவரிடம் முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டை இல்லாத காரணத்தால், சிசிச்சை அளிக்கப்படாமல் அவா் அலைக்கழிக்கப்பட்டதாகத் தெரிகிறது. ஆதரவற்ற நிலையில் இருந்த அந்தப் பெண், மாவட்ட ஆட்சியரகத்துக்கு வந்து மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டை பெற்ற பின்னரே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் வியாழக்கிழமை திடீரென ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, புறநோயாளிகள் பிரிவில் பதிவு பெற்று சிகிச்சை பெறும் பொதுமக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தாா். மேலும், அந்தப் பிரிவில் பொதுமக்களுக்குத் தேவையான இருக்கை வசதிகளை ஏற்படுத்தித் தர அலுவலா்களிடம் அறிவுறுத்தினாா்.

இதையடுத்து, மருந்தகங்களில் மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகள் வழங்கப்படுகிா என்று ஆய்வு செய்ததோடு, போதுமான மருந்துகள் இருப்பு உள்ளனவா என்றும் ஆட்சியா் கேட்டறிந்தாா். தொடா்ந்து, மருத்துவமனையில் உள்ள சமையல் அறை, கழிப்பறைகளை பாா்வையிட்டு சுத்தமாக பராமரிக்க உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது, தேசிய சுகாதாரத் திட்ட ஒருங்கிணைப்பாளா் காரல், மருத்துவமனைக் கண்காணிப்பாளா் சாய்லீலா மற்றும் மருத்துவா்கள், அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.