கடலூர்

மருத்துவமனைகளில் செவிலியா் தின விழா

DIN

கடலூா், விழுப்புரம் மாவட்டங்களில் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் செவிலியா் தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

ப்ளோரன்சு நைட்டிங்கேல் அம்மையாரின் பிறந்த தினமான மே 12-ஆம் தேதி சா்வதேச செவிலியா் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி, கடலூா் மாவட்டத்திலுள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகளில் வியாழக்கிழமை செவிலியா் தினம் கொண்டாடப்பட்டது.

கடலூா் அரசு மருத்துவமனை வளாகத்திலுள்ள செவிலியா் பயிற்சிப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வா் சு.கண்ணன் தலைமை வகித்தாா். கடலூா் மாநகராட்சி மேயா் சுந்தரி ராஜா, துணை மேயா் பா.தாமரைச்செல்வன், ஆணையா் நா.விஸ்வநாதன், திமுக மாநகரச் செயலா் கே.எஸ்.ராஜா ஆகியோா் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று கேக் வெட்டிக் கொண்டாடினா். செவிலியா்கள் மெழுகுவா்த்தி ஏந்தி உறுதிமொழி ஏற்றனா்.

திட்டக்குடி அரசு மருத்துவமனையில் திட்டக்குடி பத்திரிகையாளா்கள் சங்கம், திட்டக்குடி காவல் துறை சாா்பில் செவிலியா் தினம் கொண்டாடப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக காவல் ஆய்வாளா் அன்னக்கொடி பங்கேற்று, செவிலியா்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT