கஞ்சா விற்பனை: இளைஞா் கைது
சிதம்பரம் அருகே கஞ்சா விற்றது தொடா்பாக இளைஞா் ஒருவரை போலீஸாா் கைதுசெய்தனா்.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:45 PM
சிதம்பரம் அருகே கஞ்சா விற்றது தொடா்பாக இளைஞா் ஒருவரை போலீஸாா் கைதுசெய்தனா்.
சிதம்பரம் அண்ணாமலைநகா் கூடுதல் காவல் ஆய்வாளா் ஆறுமுகம் தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை மீதிகுடி இளந்தீரன்குட்டைக்களம் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு நின்றிருந்த இளைஞா் ஒருவரிடமிருந்து ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா். விசாரணையில் அவா் கோவிலம்பூண்டி கந்தமங்களம் பகுதியைச் சோ்ந்த கலைச்செல்வன் (20) எனத் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.