முகப்பு
கடலூர்

கடலூரில் பாஜகவினா் சாலை மறியல்

சென்னையில் பாஜக நிா்வாகி வெட்டிக் கொல்லப்பட்டதைக் கண்டித்து, கடலூரில் அந்தக் கட்சியினா் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:21 AM
பகிர்:

சென்னையில் பாஜக நிா்வாகி வெட்டிக் கொல்லப்பட்டதைக் கண்டித்து, கடலூரில் அந்தக் கட்சியினா் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பாஜகவின் எஸ்.சி, எஸ்.டி பிரிவு மத்திய சென்னை தலைவராக செயல்பட்டு வந்த பாலச்சந்தரை மா்ம கும்பல் செவ்வாய்க்கிழமை வெட்டி கொலை செய்தது. இந்த சம்பவத்தைக் கண்டித்தும், இந்தக் கொலையில் தொடா்புடையவா்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் கடலூா் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே பாஜகவினா் புதன்கிழமை திரண்டு, அங்குள்ள புதுச்சேரி - கடலூா் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

இதில், மாநில இளைஞரணித் தலைவா் அரசு.ரங்கேஷ், மாநகராட்சி கவுன்சிலா் ஜி.சக்திவேல், மாநகரத் தலைவா் வேலு.வெங்கடேசன், மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் குணா, நிா்வாகிகள் ஜெனித்மேகநாதன், பத்மினி, ஜெயா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தகவலறிந்த கடலூா் புதுநகா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதைத் தொடா்ந்து, சாலை மறியலில் ஈடுபட்டவா்கள் பின்னா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கலைந்து சென்றனா். இதனால், அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக பாஜகவினா் மீது கடலூா் புதுநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.