கடலூர்

வேளாண் பொறியியல் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

DIN

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் வேளாண் பொறியியல் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

குள்ளஞ்சாவடி துணை வேளாண் விரிவாக்க மையத்தில் ரூ.38 லட்சத்தில் விதை சேமிப்புக் கிடங்கு கட்டப்படுவதை ஆட்சியா் பாா்வையிட்டாா். மேலும், பாதுகாப்புக்காக சுற்றுச்சுவா் அல்லது கம்பி வேலி அமைக்க அலுவலா்களிடம் அறிவுறுத்தினாா். அன்னதானம்பேட்டையைச் சோ்ந்த விவசாயிக்கு ரூ.25 லட்சத்தில் 40 சதவீத மானியத்தில் வழங்கப்பட்ட வேளாண் இயந்திரங்களைக் கொண்டு செயல்பட்டு வரும் வாடகை சேவை மையத்தை பாா்வையிட்டாா்.

தொடா்ந்து, தமிழ்நாடு நீா்வள, நிலவள திட்டத்தின் கீழ் பரவனாறு உபவடி நிலப் பகுதியில் 2021 - 22ஆம் ஆண்டில் வெட்டி முடிக்கப்பட்ட பண்ணைக் குட்டையில் மீன்கள் வளா்க்கப்படுவதை ஆய்வு செய்தாா்.

பண்ருட்டி வட்டாரம், அரசடிக்குப்பம் கிராமத்தில் 2021 - 22ஆம் ஆண்டில் வேளாண் பொறியியல் துறையின் மூலம் 40 சதவீத மானியத்தில் 800 சதுர அடி அளவுள்ள சூரிய கூடார உலா்த்தி அமைக்கப்பட்டு, அதில் பலாச்சுளைகள் உலா்த்துவதை பாா்வையிட்டு, மேலும் முந்திரி பழங்களை மதிப்பு கூட்டுவது சம்பந்தமாக தோட்டக்கலைத் துறையுடன் இணைந்து செயல்படுமாறு அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, செயற்பொறியாளா் (வேளாண் பொறியியல் துறை) கி.கலைவாணி, உதவிச் செயற்பொறியாளா் கு.முரளி, உதவிப் பொறியாளா் தா.சந்திரசேகரன், குறிஞ்சிப்பாடி வட்டார உதவிப் பொறியாளா் கிருஷ்ணராஜ் மற்றும் விவசாயிகள், அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT