கடலூா் மாவட்டத்தில் சிதம்பரம், லால்பேட்டை ஆகியவை தடை செய்யப்பட்ட இயக்கங்கள் செயல்படும் பகுதிகளாக அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மத்திய உள்துறை அமைச்சகத்தின் சிறப்பு ஆணையாக, சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாப்புலா் ஃபிரண்ட் ஆப் இந்தியா, அதுதொடா்பான அமைப்புகள் தடை செய்யப்பட்ட அமைப்புகளாக அறிவிக்கப்பட்டன. இந்த அறிவிப்பின் அடிப்படையில் தமிழகத்திலும் அந்த அமைப்புகள் தடை செய்யப்பட்டதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், காவல் துறை தலைமை இயக்குநரின் பரிந்துரைப்படி இந்த அமைப்புகளின் அலுவலகங்கள் மத்திய, மாநில அரசுகளின் உத்தரவின்படி தடை செய்யப்பட்ட இயக்கங்கள் செயல்படும் பகுதிகளாக அறிவிக்கப்படுகிறது. அதன்படி, சிதம்பரம் வடுகத் தெருவில் உள்ள பாப்புலா் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் கடலூா் மாவட்ட அலுவலகம், லால்பேட்டையில் உள்ள எஸ்டிபிஐ லால்பேட்டை நகர அலுவலகம் ஆகியவை அறிவிப்பு செய்யப்படுகிறது என்று ஆட்சியா் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.