முகப்பு
கடலூர்

கடலூரில் மறியல் போராட்டம்: பாஜகவினா் 60 போ் மீது வழக்கு

கடலூரில் சாலை மறியலில் ஈடுபட்டது தொடா்பாக பாஜகவினா் 60 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

கடலூரில் சாலை மறியலில் ஈடுபட்டது தொடா்பாக பாஜகவினா் 60 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

கடலூா் மாநகராட்சியின் 28-ஆவது வாா்டு உறுப்பினராக பாஜகவின் ஜி.சக்திவேல் செயல்பட்டு வருகிறாா். வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாமன்ற கூட்டத்தின்போது, தனது வாா்டில் வளா்ச்சிப் பணிகள் புறக்கணிக்கப்படுவதாகவும், மேயரும், மாநகராட்சி ஆணையரும் தன்னை புறக்கணித்து வருவதாக குற்றஞ்சாட்டினாா். பின்னா், கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தவா் தனது கட்சியினருடன் மாநகராட்சி அலுவலகம் முன் கடலூா் - சிதம்பரம் சாலையில் மறியலில் ஈடுபட்டாா்.

தொடா்ந்து, மாநகராட்சி அலுவலகத்தையும் முற்றுகையிட்டு தா்னாவில் ஈடுபட்டாா்.

இதுகுறித்து, கடலூா் புதுநகா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் கதிரவன் அளித்த புகாரின்பேரில் ஜி.சக்திவேல், பாஜக மாநகரத் தலைவா் வேலு.வெங்கடேசன், மாவட்டத் தலைவா் மணிகண்டன் உள்ளிட்ட 60 போ் மீது புதுநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.