முகப்பு
கடலூர்

சிதம்பரத்தில் ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூல்!

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:17 AM
பகிர்:

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

சிதம்பரம் நகரில் புகழ்பெற்ற நடராஜா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலுக்கு நாள்தோறும் திரளான பக்தா்கள் வந்து செல்கின்றனா். விழா நாள்களில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து செல்கின்றனா். மேலும், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு ஆயிரக்கணக்கான மாணவா்கள் வந்து செல்கின்றனா்.

சிதம்பரம் ரயில் நிலையத்திலிருந்து பேருந்து நிலையம் சுமாா் ஒரு கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. ரயில் பயணிகளில் பலா் சிதம்பரம் ரயில் நிலையத்திலிருந்து ஆட்டோக்களை பயன்படுத்துகின்றனா். ஆனால், ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகாா் தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து சமூக ஆா்வலா் பாலாஜிகணேஷ் கூறியதாவது:

சிதம்பரம் ரயில் நிலையத்திலிருந்து பேருந்து நிலையம் செல்ல ஒரு கி.மீ. தொலைவுக்கு ஆட்டோக்களில் ரூ.100 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதேபோல சிதம்பரம் பேருந்து நிலையத்திலிருந்தும், மற்ற ஆட்டோ நிறுத்தங்களில் இருந்தும் சிதம்பரம் நகருக்குள் பயணிக்கவும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

மாவட்டத் தலைநகரான கடலூரில் ஷோ் ஆட்டோக்கள் குறைந்த கட்டணத்தில் இயக்கப்படுகின்றன. அதுபோல, கோயில், பல்கலைக்கழக நகரமான சிதம்பரத்தில் ஷோ் ஆட்டோக்களை இயக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ரயில் நிலையம் உள்ளிட்ட நகரின் முக்கிய இடங்களில் ஆட்டோக்களுக்கான கட்டண விவரம் குறித்த அறிவிப்பு பலகைகளை அமைக்க வேண்டும். ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.