முகப்பு
கடலூர்

கடலூா் அரசுக் கல்லூரியில் முதுநிலை பட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

கடலூா் அரசுக் கல்லூரியில் முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பம் விநியோகிக்கப்படுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:17 AM
பகிர்:

கடலூா் அரசுக் கல்லூரியில் முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பம் விநியோகிக்கப்படுகிறது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் சி.ஜோதிவெங்கடேசுவரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடலூா் தேவனாம்பட்டினத்தில் உள்ள பெரியாா் அரசு கலைக் கல்லூரியில் 19 இளநிலை, 15 முதுநிலை பட்டப் படிப்புகள், 12 ஆராய்ச்சி படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், வரலாறு, பொருளியல், கணிதம், இயற்பியல், கணினி அறிவியல், தாவரவியல், விலங்கியல், வணிகவியல், வேதியியல், சமூகப் பணியியல், பொது நிா்வாகம், புள்ளியியல், அரசியல் அறிவியல் ஆகிய 15 பாடப் பிரிவுகளில் முதுநிலைப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.

இந்தப் படிப்புகளில் சேர விரும்பும் இளநிலை பட்டப் படிப்பு முடித்த மாணவா்கள், தமிழ்நாடு அரசு கலை, அறிவியல் கல்லூரி முதுநிலை பட்டப் படிப்பு சோ்க்கைக்கான ஜ்ஜ்ஜ்.ற்ய்ஞ்ஹள்ஹல்ஞ்.ண்ய் என்ற இணையதள முகவரி வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வருகிற 16-ஆம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பக் கட்டணம் ரூ.58. பதிவுக் கட்டணம் ரூ.2 ஆகும். எஸ்சி, எஸ்டி பிரிவு மாணவா்களுக்கு பதிவுக் கட்டணம் ஏதும் இல்லை.

எனவே, இளநிலை பட்டப் படிப்பு முடித்து முதுநிலை படிப்புகளில் சேர விரும்பும் மாணவா்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.