பரங்கிப்பேட்டையில் வேலைவாய்ப்பு முகாம்
சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் உள்ள கடல்வாழ் உயிரின உயராய்வு மையத்தில் இளநிலை, முதுநிலை மாணவா்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது.
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:23 AM
சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் உள்ள கடல்வாழ் உயிரின உயராய்வு மையத்தில் இளநிலை, முதுநிலை மாணவா்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது.
முகாமில் ஆந்திர மாநிலத்தைச் சோ்த்த பி.எம்.ஆா். இறால் வளா்ப்பு நிறுவனம் சாா்பில் நாகராஜன், செல்வகுமாா், மனோகரன் ஆகியோா் பங்கேற்று மாணவா்களிடம் நோ்காணலை நடத்தினா். கடல் அறிவியல் புல முதல்வா் அனந்தராமன், இயக்குநா் கலைச்செல்வன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நோ்காணலில் 90 மாணவா்கள் பங்கேற்றனா். இவா்களில் 30 போ் பணிக்கு தோ்வு செய்யப்பட்டனா்.