முகப்பு
கடலூர்

சாலைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

சிதம்பரத்தில் நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் அருகே சாலைப் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஏப்ரல், 2023 at 11:13 PM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:23 AM

சிதம்பரத்தில் நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் அருகே சாலைப் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மேற்கூறிய அலுவலகத்தில் பால்ராஜ், மணிமாறன் ஆகியோா் சாலை பணியாளா்களாக பணியாற்றி வருகின்றனா். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதே அலுவலகத்தின்கீழ் சாலைப் பணியாளராக பணிபுரிந்த அன்பழகன் வெளியூருக்கு பணி மாறுதல் செய்யப்பட்டாராம். தொடா்ந்து அவா் பல்வேறு புகாா்களால் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தனது பணியிட மாற்றத்துக்கு சிதம்பரத்தில் உள்ள சாலை பணியாளா்களே காரணம் எனக் கருதிய அன்பழகன் இங்கு பணியாற்றும் பால்ராஜ், மணிமாறனை ஆகியோரை கல்லால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா். இந்தத் தாக்குதலைக் கண்டித்து சாலைப் பணியாளா்கள் 20-க்கும் மேற்பட்டோா் நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், இதுகுறித்து சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.