செய்தியாளர்களிடம் தெரிவித்த வழக்குரைஞர் ஏ.சம்பந்தம். உடன் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை நிர்வாகிகள். 
கடலூர்

சிதம்பரத்தில் பிப்.18-ல் நாட்டியாஞ்சலி விழா: உயர்நீதிமன்ற நீதிபதி தொடங்கி வைக்கிறார்

சிதம்பரத்தில் 42-வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா பிப்ரவரி 18-ஆம் தேதி தொடங்குகிறது. இதனை உயர் நீதிமன்ற நீதிபதி தொடங்கி வைக்க உள்ளார்.

DIN

சிதம்பரம்: சிதம்பரத்தில் 42-வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா பிப்ரவரி 18-ஆம் தேதி தொடங்குகிறது. இதனை உயர் நீதிமன்ற நீதிபதி தொடங்கி வைக்க உள்ளார்.

சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் 42-வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா வருகிற பிப்.18-ம் தேதி தெற்குரதவீதி ராஜா சர் அண்ணாமலை செட்டியார் டிரஸ்ட் வளாகத்தில் தொடங்கி பிப்.22-ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது என அறக்கட்டளை செயலாளர் வழக்குரைஞர் ஏ.சம்பந்தம் தெரிவித்துள்ளார்.

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் 1981-ல் நாட்டியாஞ்சலி விழா தொடங்கப்பட்டு 2014 வரை 33 ஆண்டுகளாக நாட்டியாஞ்சலி விழாவை நடத்தி வந்தனர். 

இந்நிலையில் நடராஜர் கோயிலை பொதுதீட்சிதர்களே நிர்வகிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து 2015-ம் ஆண்டு பொதுதீட்சிதர்களே நாட்டியாஞ்சலியை நடத்துவதாக அறிவித்து கோயிலில் தில்லை நாட்டிய அஞ்சலி டிரஸ்ட் சார்பில் நாட்டியாஞ்சலியை நடத்தினர். இதனால் நாட்டியாஞ்சலி அறக்கட்டளையினர் தெற்குவீதியில் வி.எஸ் டிரஸ்ட் வளாகத்தில் நாட்டியாஞ்சலி விழா நடத்தி வந்தனர். நடராஜர் கோயிலில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் கோயில் பொதுதீட்சிதர்கள் நடத்தி வந்த நாட்டியாஞ்சலி விழா 2022ம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
                                                                             

இதையும் படிக்க.. கடற்கரை - செங்கல்பட்டு புறநகர் ரயிலில் ஏசி வசதி: சாத்தியக்கூறுகள் பற்றி ஆய்வு

இந்த ஆண்டு 42-வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் வருகிற பிப்.18-ம் தேதி தொடங்கி 5 நாட்கள் நடைபெறுகிறது. விழாவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் தொடங்கி வைக்கிறார் என நாட்டியாஞ்சலி அறக்கட்டளை செயலாளர் வழக்குரைஞர் ஏ.சம்பந்தம் சனிக்கிழமை அன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

மேலும், அவர் கூறுகையில் நாட்டியாஞ்சலியில் நாடகம், கதக், குச்சுப்புடி, குற்றால குறவஞ்சி, மோகினி ஆட்டம், மணிப்புரி நடனம் உள்ளிட்ட நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 

நிறைவு நாள் அன்று தஞ்சை கிராமியக் கலைஞர்களின் பொய்க்கால் குதிரை, மயில் நடனம் நடைபெறுகிறது. வடமாநிலங்களிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்து நாட்டியக் கலைஞர்கள் பங்கேற்று நாட்டிய அஞ்சலி செலுத்துகின்றனர். 

நாட்டியாஞ்சலியில் தேவார பன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது என வழக்குரைஞர் ஏ.சம்பந்தம் தெரிவித்தார். நாட்டியாஞ்சலி விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் டாக்டர் ஆர்.முத்துக்குமரன், முன்னாள் தலைவர் வழக்குரைஞர் ஏ.கே.நடராஜன், துணைத்தலைவர்கள் ஆர்.நடராஜன், ஆர்.ராமநாதன், செயலாளர் ஏ.சம்பந்தம், பொருளாளர் எம்.கணபதி மற்றும் உறுப்பினர்கள் ஆர்.கே.கணபதி, ஆர்.சபாநாயகம், டாக்டர் எஸ்.அருள்மொழிச்செல்வன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கார்குழல் கடவையே... மாளவிகா மேனன்!

அஞ்சு வண்ணப் பூவே... அனன்யா!

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!

வெள்ளி நகைகளை வைத்து இனி கடன் பெறலாம்! முழு விவரம்

குழந்தைகளுக்கு விருது இல்லையா? பிரகாஷ் ராஜிடம் 12 வயது குழந்தை நட்சத்திரம் காட்டம்!

SCROLL FOR NEXT