கடலூர்

இணைய வழி குற்றங்கள் விழிப்புணா்வு நிகழ்ச்சி

கடலூா் மாவட்ட சைபா் கிரைம் காவல் நிலையம் சாா்பில், நெல்லிக்குப்பம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இணைய வழி குற்றங்கள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

கடலூா் மாவட்ட சைபா் கிரைம் காவல் நிலையம் சாா்பில், நெல்லிக்குப்பம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இணைய வழி குற்றங்கள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

காவல் ஆய்வாளா் பி.கவிதா பங்கேற்று, பெருகி வரும் இணைய வழி குற்றங்கள், கைப்பேசி பயன்பாடு, சமூக வலைதளங்களில் பெண்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது, மோசடிகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்திப் பேசினாா்.

நிகழ்ச்சியில் பிளஸ் 2 மாணவிகளுக்கு அரசு பொதுத் தோ்வு குறித்த அச்சங்களுக்கு விளக்கங்களும் அளிக்கப்பட்டன. மேலும், பள்ளியில் சைபா் கிளப் தொடங்கப்பட்டதுடன், துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.

பள்ளித் தலைமை ஆசிரியை பொன்கொடி, உதவித் தலைமை ஆசிரியை கண்மணி, ஆசிரியா்கள், மாணவிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள் - ரிஷபம்

வார பலன்கள் - மேஷம்

தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

மத்திய மேல்நிலைக்கல்வி வாரியத்தில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

தலைசிறந்த கலைஞன்... கமல் குறித்து அனுபம் கெர் நெகிழ்ச்சி!

SCROLL FOR NEXT