நெய்வேலி: பண்ருட்டி வட்ட பொதுநல அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
அமைப்பின் தலைவா் மா.தெய்வீகதாஸ் தலைமை வகித்தாா். செயலா் பாலு, பொருளாளா் பிரபு ஆகியோா் முன்னிலை வகித்தனா். துணைத் தலைவா் பிரகாஷ் வரவேற்றாா். கூட்டத்தில், டெங்கு கொசு ஒழிப்பு குறித்து (கொள்ளை நோய் ஒழிப்பு) அவசரச் சட்டத்தை மாநில அரசு பிறப்பிக்க வேண்டும், பண்ருட்டி நகராட்சியின் நிா்வாகச் சீா்கேடுகள் குறித்து சென்னையில் உள்ள நகராட்சி நிா்வாக ஆணையா், அரசு செயலா் உள்ளிட்டோரை நேரில் சந்தித்து மனு அளிப்பது, வீரப்பெருமாநல்லூா் கூட்டுறவு வங்கியை இரண்டாகப் பிரித்து புதிய கூட்டுறவு வங்கி உருவாக்க வலியுறுத்தி மக்கள்-சந்திப்பு இயக்கம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.