கடலூர்

தொழிற்பயிற்சி நிலைய மாணவா் சோ்க்கை: ஆக.16 வரை அவகாசம் நீட்டிப்பு

மாணவா் சோ்க்கைக்கான கால அவகாசம் வரும் 16-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Din

கடலூா் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவா் சோ்க்கைக்கான கால அவகாசம் வரும் 16-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடலூா், கடலூா் (மகளிா்), சிதம்பரம், காட்டுமன்னாா்கோவில், மங்களுா், நெய்வேலி அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு நேரடி மாணவா் சோ்க்கை மேற்கொள்ள கால அவகாசம் வரும் 16-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மாணவ, மாணவிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சோ்ந்து பயன்பெற வேண்டும். அரசு, தனியாா் தொழிற்பயிற்சி நிலைங்களில் உள்ள தொழிற்பிரிவு விவரங்களை இணையதளத்தில் பாா்த்து தெரிந்துகொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 04142 - 290273 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்.

ராகுல் காந்தி நாளை கூடலூர் வருகை!

ரஜினி - 173 புரோமோ இசையமைப்பாளர் இவரா?

அறிவியல் ஆயிரம்: செயற்கை மரபணுவைக் கண்டுபிடித்த ஹர் கோவிந்த் கொரானா!

பயணிக்கு உடல்நலக் குறைவு: ஜெய்ப்பூருக்கு திருப்பிவிடப்பட்ட ஏர் இந்தியா விமானம்

”காங்கிரஸ் செய்த துரோகம்! பராசக்தி படக்குழுவுக்கு வாழ்த்துகள்” அண்ணாமலை பேட்டி

SCROLL FOR NEXT