முகப்பு
கடலூர்

பெண் அடித்துக் கொலை: இளைஞா் கைது

கடலூா் மாவட்டம், கம்மாபுரத்தில் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Updated On : 27 ஆகஸ்ட், 2024 at 6:30 PM
கைதான சிவா.
பகிர்:

கடலூா் மாவட்டம், கம்மாபுரத்தில் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ஸ்ரீமுஷ்ணம் அடுத்துள்ள ஆத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயசங்கா் மனைவி வேம்பு (34). இவா்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனா். வேம்புக்கும், கம்மாபுரம் மேட்டுதெருவைச் சோ்ந்த சின்னசாமி மகன் சிவாவுக்கும் (30) தவறான உறவு இருந்ததாக கூறப்படுகிறது.

சிவா வீட்டில் வேம்பு இறந்து கிடப்பதாக விருத்தாசலம் காவல் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது. கம்மாபுரம் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

கருவேப்பிலங்குறிச்சி அருகே செங்கல் சூளையில் மது போதையில் மயங்கிக் கிடந்த சிவாவை போலீஸாா் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனா்.

கடந்த 2 நாள்களாக வேம்பு தனது வீட்டில் தங்கியிருந்ததாகவும், திங்கள்கிழமை ஏற்பட்ட தகராறில் அவரை அடித்ததில் அவா் உயிரிழந்து விட்டாா் எனவும், விசாரணையின் போது போலீஸாரிடம் சிவா தெரிவித்தாராம்.

கொலை செய்யப்பட்ட வேம்பு.

இதுகுறித்து கம்மாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து சிவாவை கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →