முகப்பு
கடலூர்

குளத்தில் மூழ்கிய மாணவர் மாயம்

கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே குளத்தில் குளித்தபோது மாயமான மாணவரை தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர்.

Updated On : 5 டிசம்பர், 2024 at 7:25 PM
பகிர்:

கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே குளத்தில் குளித்தபோது மாயமான மாணவரை தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர்.

கடலூர் செம்மண்டலத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் அமைந்துள்ளது. இந்த நிலையத்தில் பயிலும் 6 மாணவர்கள் நெல்லிக்குப்பத்தை அடுத்துள்ள நத்தப்பட்டு ஆஞ்சநேயர் கோயில் எதிரே உள்ள குளத்தில் வியாழக்கிழமை பிற்பகல் குளித்துக்கொண்டிருந்தனர். இதில், கோண்டூர் பகுதியைச் சேர்ந்த குரு மகன் கதிர் (17) நீரில் மூழ்கிய நிலையில், மீண்டும் வெளியே வரவில்லை.

இதுகுறித்து சக மாணவர்கள் அளித்த தகவலின்பேரில், நிகழ்விடத்துக்கு வந்த கடலூர் மற்றும் நெல்லிக்குப்பம் தீயணைப்பு நிலைய வீரர்கள் நீரில் மூழ்கிய கதிரை தேடி வருகின்றனர்.