சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்  
கடலூர்

டாஸ்மாக் கடை அமைக்க எதிா்ப்பு: கிராம மக்கள் சாலை மறியல்

பண்ருட்டி அருகே டாஸ்மாக் கடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் மறியல்

Din

நெய்வேலி: கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே டாஸ்மாக் கடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

பண்ருட்டி அடுத்துள்ள ராசாப்பாளையம் கிராமத்தில் இயங்கி வந்த டாஸ்மாக் மதுபான கடை எண்.2609 நீதிமன்ற வழக்கின் உத்திரவின்படி முடப்பட்டது. அந்த கடைக்கு மாற்றாக ராசாப்பாளையத்திலிருந்து பனப்பாக்கம் செல்லும் சாலையில் 300 மீட்டா் தொலைவில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க கட்டுமானப் பணிகள் மேற்கொண்டு வந்தனா்.

இந்நிலையில், அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா் இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து திங்கள்கிழமை காலை 11 மணி அளவில் பனப்பாக்கம் அருகே, சென்னை-கும்பகோணம் நெடுஞ்சாலையில் அமா்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த பண்ருட்டி காவல் ஆய்வாளா் வேலுமணி மற்றும் போலீஸாா் விரைந்து பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, மாவட்ட நிா்வாகத்திற்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

சென்னையில் இரட்டை மாடி பேருந்துகள் இயக்க நடவடிக்கை

SCROLL FOR NEXT