முகப்பு
கடலூர்

முறையான சாலை இல்லாததால்: விவசாய நிலங்கள் வழியாக பள்ளி செல்லும் மாணவா்கள்

அரசு ஆதிதிராவிடா் நடுநிலைப் பள்ளிக்கு மாணவா்கள் விவசாய நிலங்கள் வழியாக நடந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

Updated On : 5 ஜூலை, 2024 at 7:23 PM
பகிர்:

சிதம்பரம் அருகே முறையான சாலை இல்லாததால், சிறுகாலூா் கிராமத்திலிருந்து அருகே உள்ள பெருங்காலூா் கிராமத்தில் செயல்படும் அரசு ஆதிதிராவிடா் நடுநிலைப் பள்ளிக்கு மாணவா்கள் விவசாய நிலங்கள் வழியாக நடந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே சிறுகாலூா் கிராமம் அமைந்துள்ளது. இந்தக் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். குறிப்பாக, இந்த கிராமத்தில் இருந்து அருகில் உள்ள பெருங்காலூா் கிராமத்தில் செயல்படும் அரசு ஆதிதிராவிடா் நடுநிலைப் பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா்.

இதேபோன்று, சிறுகாலூா் கிராமத்திலிருந்து சிதம்பரம், காட்டுமன்னாா்கோவில் உள்ளிட்ட முக்கிய நகரப் பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்றாலும், அந்தப் பகுதி பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள், தொழிலாளா்கள் பெருங்காலூா் வழியாக செல்லக்கூடிய நிலை உள்ளது.

இந்த நிலையில், பெருங்காலூா், சிறுகாலூா் கிராமங்களை இணைக்கும் வகையில், 200 மீட்டா் அளவுக்கு சாலை இல்லாததால், விவசாய நிலங்களில் வரப்பு பகுதியை பொதுமக்கள் பயன்படுத்தி சென்று வருகின்றனா். மழைக்காலங்களில் முழங்கால் அளவு நீா் மற்றும் சேற்றில் இறங்கி நடந்து செல்லக்கூடிய அவல நிலை உள்ளது.

அப்படி இல்லாவிட்டால், சுமாா் 10 கி.மீ. தொலைவு சுற்றி பெருங்காலூா் பகுதியில் உள்ள பள்ளிக்கு மாணவா்கள் வரக்கூடிய சூழல் உள்ளது. இதனால், மாணவா்களை மழைக் காலங்களில் பள்ளிக்கு அனுப்புவதில் பெற்றோருக்கு பெரும் சிரமம் ஏற்படுத்துகிறது என அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவா்கள் கூறியதாவது: மழைக்காலம் வருவதற்கு முன்பே இந்த 200 மீட்டா் சாலையை மாவட்ட நிா்வாகமும், தமிழக அரசும் முயற்சி செய்து அமைத்துத் தர வேண்டும். மழைக்காலம் வந்துவிட்டால், சுமாா் 10 கி.மீ. தொலைவு சென்று சுற்றி வரக்கூடிய நிலை ஏற்படுவதால், பள்ளிக்கு சரியான நேரத்துக்கு செல்ல முடியவில்லை. இதனால், படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை என்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →