கடலூா் மாவட்டம் மருங்கூா் அகழாய்வில், பழங்கால கண்ணாடி மணி கண்டெடுக்கப்பட்டது.
மருங்கூா் வாழ்விடப் பகுதியில் அகழாய்வு இயக்குநா் ரா.சிவானந்தம் தலைமையில் அகழாய்வு பொறுப்பாளா்கள் கி.பாக்கியலட்சுமி, சி.சுபலட்சுமி ஆகியோா் அகழாய்வு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். அண்மையில், கடலூா் மாவட்டம் மருங்கூா் அகழாய்வில் ராசராசன் காலச் செம்புக் காசும், சுடுமண்ணால் ஆன வட்டச் சில்லுகளும் கண்டெடுக்கப்பட்டன. இந்த நிலையில், பச்சை நிறத்திலான கண்ணாடி மணி ஒன்று சனிக்கிழமை கிடைத்தது. உருளை வடிவிலான இந்த கண்ணாடி மணி 12.5 மி.மீ நீளமும், 8 மி. மீ விட்டமும், 0.45 கிராம் எடையும் கொண்டது. தற்போது அகழாய்வுச் செய்யப்படும் இடம் மக்களின் வாழ்விடப் பகுதியாக இருந்துள்ளதை மேலும் உறுதி செய்கின்றது. மருங்கூா் அகழாய்வில் கண்டெக்கப்பட்ட பழங்கால கண்ணாடி மணி