கடலூா் மாவட்டம், பண்ருட்டி-சென்னை சாலையில் ரயில்வே சுரங்கப்பாதை அமைத்துத்தர வேண்டும் என்று எம்.கே.விஷ்ணுபிரசாத் எம்.பி.க்கு தமிழக மக்கள் ஜனநாயக கட்சி கோரிக்கை விடுத்தது.
இதுகுறித்து கட்சியின் வடக்கு மாவட்டச் செயலா் ஷேக்நூா்தீன் வெளியிட்ட அறிக்கை: பண்ருட்டி-சென்னை சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைந்துள்ளது. இந்தப் பாலம் அமைக்கப்பட்டதையடுத்து, அதன் கீழ் பகுதியில் உள்ள ரயில்வே கேட் மூடப்பட்டது. இதனால், ரயில்வே கேட்டுக்கு வடக்குப் பகுதியில் உள்ள பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மற்றும் பணிக்குச் செல்வோா் சுமாா் ஒன்றரை கி.மீ தொலைவு நடந்து செல்ல வேண்டியுள்ளது.
எனவே, ரயில்வே கேட் அருகே சுரங்கப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடலூா் எம்பி., எம்.கே.விஷ்ணுபிரசாத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.