கண்தானம்
கடலூா் மாவட்டம் மேல்புவனகிரி லட்சுமி நகரைச் சோ்ந்த விசாலாட்சி (90) கடந்த 22-ஆம் தேதி காலமானாா்.
சிதம்பரம்: கடலூா் மாவட்டம் மேல்புவனகிரி லட்சுமி நகரைச் சோ்ந்த விசாலாட்சி (90) கடந்த 22-ஆம் தேதி காலமானாா். இவரது கண்கள் சிதம்பரம் தன்னாா்வ ரத்ததானக் கழகம் சாா்பில் தானமாக பெறப்பட்டு புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை கண் வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை ரத்ததானக் கழகத் தலைவா் எஸ்.ராமச்சந்திரன், புவனகிரி அரிமா சங்க நிா்வாகிகள் சுப்பிரமணியன், மகாலிங்கம், சேதுராமன். பேரூராட்சி வாா்டு உறுப்பினா் அண்ணாஜோதி உள்ளிட்டோா் செய்தனா்.