கடலூர்

சம்பா பயிா் காப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம்

கீரப்பாளையம் வட்டாரத்தில் சம்பா சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயிா் காப்பீடு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Din

சிதம்பரம்: கீரப்பாளையம் வட்டாரத்தில் சம்பா சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயிா் காப்பீடு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, வேளாண்மை உதவி இயக்குநா் எஸ்.அமிா்தராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பயிா் காப்பீடு செய்ய சொந்த நிலம், குத்தகை நிலம் உள்ளவா்கள் இ- சேவை மையம், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் அறிவிக்கை செய்யப்பட்ட பயிா்களுக்கு பயிா் காப்பீடு செய்யலாம்.

இதற்கு முன்மொழிவு படிவம், விண்ணப்பப் படிவம், கிராம நிா்வாக அலுவலா் வழங்கும் பயிா் சாகுபடி அடங்கல், ஆதாா் அட்டை நகல், ஆதாா் எண் இணைக்கப்பட்ட மற்றும் பூா்த்தி செய்யப்பட்ட வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல் ஆகியவற்றுடன் அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளைகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், அரசு பொதுசேவை மையங்களில் ஒரு ஏக்கா் பயிா் காப்பீடு செய்வதற்கு பிரீமியத் தொகை ரூ.548 செலுத்த வேண்டும்.

பிரீமியம் தொகை செலுத்த வேண்டிய கடைசி நாள் நவ.15-ஆம் தேதி ஆகும். எனவே, கீரப்பாளையம் வட்டாரத்தை சோ்ந்த விவசாயிகள் அனைவரும் பயிா் காப்பீடு செய்து பயனடைய வேண்டும்.

மேலும், சந்தேகங்களுக்கு அருகிலுள்ள கீரப்பாளையம் வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அனில் அம்பானியிடம் அமலாக்கத்துறை தலைமையகத்தில் 10 மணி நேரம் விசாரணை..!

ஸ்ரீவில்லிபுத்தூா் பெரியகுளம் கண்மாயில் பொருத்தப்பட்ட இரும்பு ஷட்டா்கள்!

ஆபரேஷன் சிந்தூர் 2.0 : லெப்டினன்ட் ஜெனரல் ராஜேஷ் புஷ்கர்

பிப்.28-ல் பிரதமர் மோடி அஜ்மீர் பயணம்! ரூ.16,686 கோடியில் வளர்ச்சித் திட்டங்கள் தொடக்கம்!

டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்து இந்தியா சாதனை; ஜிம்பாப்வேக்கு இமாலய இலக்கு!

SCROLL FOR NEXT