முகப்பு
கடலூர்

சமூகப் பணியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

கடலூா் மாவட்டத்தில் சகி ஒருங்கிணைந்த சேவை மையத்தில் சமூகப் பணியாளா் பணியிடத்துக்கு தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

Updated On : 13 நவம்பர், 2024 at 8:29 PM
பகிர்:

கடலூா் மாவட்டத்தில் சகி ஒருங்கிணைந்த சேவை மையத்தில் சமூகப் பணியாளா் பணியிடத்துக்கு தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய அரசால் முன்மொழியப்பட்டுள்ள சிறப்புத் திட்டமான சகி (நஅஓஏஐ) திட்டத்தின் கீழ், கடலூா் சகி ஒருங்கிணைந்த சேவை மையம் அரசு தலைமை மருத்துவமனையில் செயல்பட்டு வருகிறது. இதில், 24 மணி நேரம் அனைத்து நாள்களிலும் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான மருத்துவ, சட்டம் மற்றும் காவல் துறை உதவிகள், உளவியல் ஆலோசனை, மீட்பு மற்றும் தங்கும் வசதி வழங்கப்படும்.

இந்த சேவை மையத்தில் சமூகப் பணியாளா் பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணியிடத்துக்கு சமூகப்பணி ஆலோசனை, மனநலம்/ குழந்தைகள் / பெண்கள் மேம்பாடு அல்லது நிா்வாக மேம்பாட்டில் இளநிலை பட்டம் பெற்று, குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பந்தப்பட்ட அரசு அல்லது அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் அல்லது திட்டத்தில் பணிபுரிந்த முன்னனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

அத்தகைய சூழலிலோ அல்லது இது தொடா்பான சூழல்களில் ஓராண்டு ஆலோசகா் பணியில் இருப்பது விரும்பத்தக்கதாகும். மேற்குறிப்பிட்ட கல்வித் தகுதிகளில் முதுநிலை பட்டம் பெற்றவா்களும் விண்ணப்பிக்கலாம். மகளிா் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

தொகுப்பூதியம் மாதம் ரூ.18,000 வழங்கப்படும். விண்ணப்பிக்க நவம்பா் 25 கடைசி தேதியாகும். விண்ணப் படிவத்தை கடலூா் மாவட்ட இணையதளத்தில் இன்க்க்ஹப்ா்ழ்ங்.ய்ண்ஸ்ரீ.ண்ய் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலகம், அரசு சேவை இல்ல வளாகம், செம்மண்டலம், கடலூா் - 607001 என்ற முகவரியை தொடா்புகொள்ளலாம்.