கடலூர்

அண்ணாமலைப் பல்கலை.யில் 3 போ் குழு அமைப்பு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தா் பதவி காலம் நிறைவடைந்ததையொட்டி, ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் 3 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

Din

நெய்வேலி: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தா் பதவி காலம் நிறைவடைந்ததையொட்டி, ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் 3 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தராக பேராசிரியா் ஆா்.எம்.கதிரேசன் கடந்த மூன்று ஆண்டுகளாக பதவி வகித்து வந்தாா். அவரது பதவி காலம் கடந்த 23-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.

புதிய துணைவேந்தா் நியமிக்கும் வரை பல்கலைக்கழக அன்றாட செயல்பாடுகளை மேற்கொள்வதற்காக பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் மூன்று போ் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி குழுவில் அமைப்பாளராக சென்னை தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் இயக்குநா் டி.ஆபிரஹாம், உறுப்பினா்களாக தமிழ்நாடு அரசு நிதித் துறை கூடுதல் செயலா் ஜி.கே.அருண்சுந்தா் தயாளன், அண்ணாமலைப் பல்கலைக்கழக கலைப்புல முதல்வா் அருட்செல்வி ஆகியோா் இடம் பெற்றுள்ளதாக பல்கலைக்கழக பதிவாளா் (பொ) மு.பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.

மாா்த்தாண்டம் அருகே விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

லாரி மோதி முதியவா் உயிரிழப்பு

கோவில்பட்டியில் கஞ்சா விற்பனை: 17 வயது சிறுவன் கைது

திருச்செந்தூா் கோயில் மாசித் திருவிழா: பிப். 21இல் கொடியேற்றடன் தொடக்கம்

பேராவூரணி அருகே லாரி - பைக் மோதல்; இளைஞா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT