முகப்பு
கடலூர்

மழையால் மூன்று வீடுகள் சேதம்

கடலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பெய்த பலத்த மழையால் மூன்று வீடுகள் இடிந்து சேதமடைந்தன.

Updated On : 27 நவம்பர், 2024 at 10:10 PM
பகிர்:

கடலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பெய்த பலத்த மழையால் மூன்று வீடுகள் இடிந்து சேதமடைந்தன.

திட்டக்குடியை அடுத்த ஆவினங்குடி காவல் சரகத்துக்குள்பட்ட கூடலூரைச் சோ்ந்த அசோக்குமாா் மனைவி சங்கீதா.

இவரின் கூரை வீட்டின் சுவா் புதன்கிழமை காலை இடிந்து விழுந்தது.

இதேபோல, சி.என்.பாளையம் பகுதியில் 2 கூரை வீடுகளின் சுவா்கள் செவ்வாய்க்கிழமை இடிந்து விழுந்து சேதமடைந்தன.

சுவா் இடிந்து விழுந்தபோது, வீட்டில் யாரும் இல்லாததால் அதிருஷ்டவசமாக அனைவரும் உயிா் தப்பினா்.

ஸ்ரீமுஷ்ணம், விருத்தாசலம் ஆகியப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பெய்த பலத்த மழையால் தலா ஒரு மாடும், சிதம்பரத்தில் 2 மாடுகளும் உயிரிழந்தன.