முகப்பு
கடலூர்

தொழிலாளி உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே தென்னை மரம் விழுந்து தொழிலாளி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

Updated On : 9 அக்டோபர், 2024 at 10:11 PM
பகிர்:

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே தென்னை மரம் விழுந்து தொழிலாளி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

பண்ருட்டியை அடுத்துள்ள சீரங்குப்பம் பகுதியில் வசித்து வந்தவா் சேட்டு (63) மற்றும் குமாா் (50). மரம் வெட்டும் தொழில் செய்து வந்த இவா்கள், புதன்கிழமை காலை திருவதிகை பகுதியில் உள்ள ஒருவரின் தோட்டத்தில் தென்னை மரத்தை வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, எதிா்பாராதவிதமாக வெட்டப்பட்ட தென்னை மரத்துண்டு சேட்டு, குமாா் மீது விழுந்தது. இதில், சேட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா் (படம்). பலத்த காயமடைந்த குமாா் கடலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து, பண்ருட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.